Showing posts with label Mind's eye. Show all posts
Showing posts with label Mind's eye. Show all posts

Sunday, April 13, 2008

பயணம்

இரவின் தனிமையில்
நடுநிசியின் குளிரில்
என்னை - நான் தேடிக் கொண்டு
உள்ளுக்குள்ளே பயணம்...
இதோ என் எண்ணங்கள் !
எழுத்துக்களாய் ...

உள்ளின் பயணம்
வெளியின் மரணம் !

சுற்றியுள்ள அண்டங்களின்
சூழிலிருந்து புறப்பட்ட நான் !

நான்...
நான் யார்?
இந்த நான் என்பது என்ன?

வெளியின், வீதியின்
தூசி, துரும்போ?
இல்லை!
உணவு, ஊன்-இதனால்
வாழ்ந்து வீழும்
சதைப் பிண்டமா ?

வாழ்வின் வெளியில்
வழியினைத் தேடி !
வெளியின் வெறியாட்டத்தில்
வெறுமையை உணர்ந்து ...
வெளியினை வெற்றி கொள்ள ...

இதோ !
உள்ளுக்குள்ளே பயணம்
என்னை நான் தேடிக் கொண்டு
என் உள்ளின் உள்ளே ..
இன்னும் உள்ளேயே...

நடுநிசியின் குளிரில்
இரவின் தனிமையில்
இதோ வெறுமையாய்
நான் - நான் மட்டும் ...

பயணங்களின் பாதையில்
எண்ணங்களை வண்ணங்களாய் மாற்ற
நிழல்களின் துணையோடு
நினைவுகள் உருகி
உயிர் மட்டும் - இங்கே !
என்னோடு... என்னோடு...
நான் - மட்டும் தனியே !!!

Wednesday, March 12, 2008

அவள் ஒரு வெள்ளை நிழல்


பனித்துளி இரவுகளில்
விழித்துத்துணை கனவுகளோடு
வழித்துத்துணையாக வர வேண்டும்
நீ எனக்கு...

புரியாத மொழி பேசி
கண்களால் கைது செய்து
விழியோர ஈரம் காட்டி
மனதோர ரணம் ஆற்றும்
வெள்ளை நிழல் தேவதையே
வழித்துணையாக வர வேண்டும் - நீ எனக்கு...

விடியும் இரவுகளின்
விடியாத நொடிகளில்
முடியாத பயணங்களின்
பிரியாத ஒரு நிழலாய்
வழித்துணையாக வர வேண்டும் - நீ எனக்கு...

உயிரோடு இருந்தாலும்
உந்தன் நினைவுகளால்...
நிழல்களின் உணர்வுகளோடு
உன்மத்தம் பிடித்தவனாய்...
நான்...நான் மட்டும் தனியே !
வழித்துணையாக வர வேண்டும் - நீ எனக்கு !!!